ராகுலுக்கு பிரதமர் பாராட்டு மழை
டெல்லி: நாட்டையும் காங்கிரஸ் கட்சியையும் ராகுல் காந்தி புதிய உயரத்துக்கு இட்டுச் செல்வார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. அதில் பேசிய கட்சித் தலைவர் சோனியா மதசார்பின்மையை கட்டிக் காக்கவும், மதவாத சக்திகளுக்கு எதிராகவும் காங்கிரஸ் தொடர்ந்து பாடுபடும் என்றார்.
இக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்ேமாகன் சிங்,
ராகுலைப் போன்ற இளம் தலைவர்கள் இந்த நாட்டின் இளம் உள்ளங்களை நிச்சயம் வெல்வார்கள். இந்த தேசத்தையும் கட்சியும் புதிய உயரத்துக்கு இட்டுச் செல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. மகாத்மா, நேருவின் கனவுகளை, எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் கட்சியின் தொண்டர்கள் செயல்பட வேண்டும்.
வறுமையை நாட்டின் எல்லா மூலை முடுக்குகளிலும் அகற்ற பாடுபட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications