சீசன் தொடங்கியது: சபரிமலை கோவில் திறப்பு
பத்தனம்திட்டா: 41 நாள் மண்டல விழாவையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் திறக்கப்பட்டுள்ளது.
சபரிமலை சீசன் தொடங்கியுள்ளது. இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், 41 நாள் மண்டல பூஜை விழாவையொட்டி அய்யப்பன் கோவில் நேற்று திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ்வரு முன்னிலையில் ஓய்வு பெறும் மேல் சாந்தி (தலைமை பூசாரி) ஈஸ்வரன் நம்பூதிரி கோவில் கருவறையைத் திறந்தார். பின்னர் பாரம்பரிய குத்துவிளக்கை அவர் ஏற்றினார்.
அதன் பின்னர் 18 படிகள் வழியாக கீழிறங்கிச் சென்ற அவர் அங்குள்ள ஆழித் தீபத்தை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷம் எழுப்பி வழிபட்டனர்.
பின்னர் புதிய மேல்சாந்தி கிருஷ்ணன் நம்பூதிரியை தந்திரி கண்டரரு மகேஷ்வரு நியமித்தார். அதன் பின்னர் கலசபூஜையைச் செய்த தந்திரி, மேல்சாந்தியின் காதில் அய்யப்பனின் மூல மந்திரத்தை உச்சரித்தார்.
இன்று அதிகாலை 4.30 மணிக்கு வழக்கமான பூஜைகள் தொடங்கின. முதலில் நிர்மால்ய தரிசனம், பின்னர் கணபதி பூஜை நடைபெற்றது. அதன் பிறகு நெய்யாபிஷேகம் நடந்தது. காலை 7. 30 மணியளவில் உஷ காலை பூஜை நடத்தப்பட்டது. உச்சி கால பூஜை 12.30 மணிக்கு நடைபெறும். 1 மணிக்கு நடை மூடப்படும்.
சபரிமலை கோவிலில் இன்று முதல் வழக்கமான பூஜைகள் தொடங்கியுள்ளன. டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெறும்.
நேற்று மாளிகைபுரம் தேவி கோவில் நடையும் திறக்கபப்ட்டது. கோவில் மேல்சாந்தி மதுசூதன் பொட்டி கருவறையைத் திறந்தார்.
பின்னர் புதிய மேல் சாந்தியாக கிருஷ்ணன் நம்பூதிரி நியமிக்கப்பட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications