கிருஷ்ணசாமி மீது தாக்குதல்-கைதானவர்களுக்கு ஜாமீன் மறுப்பு
ராமநாதபுரம்: காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் கைதான 11 பேருக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடந்த 29ம் தேதி தேவர் ஜெயந்தி முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக முதுகுளத்தூர் வரும்போது கீழகன்னிச்சேரி அருகில் 50 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்கிவிட்டு தப்பி ஓடிவி்ட்டது.
இது குறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கீழகன்னிச்சேரியை சேர்ந்த முனியசாமி, ரகு, ராமசந்திரன், மலைமேடு, தமிழரசன், கருப்பையா, ரவி, ராமலிங்கம், உப்புலி, உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 11 பேரும் ஜாமீன் வழங்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ராஜூ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கைதான 11 பேருக்கும் ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் 11 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications