கோவை- ரன்வேயில் மோத இருந்த ஏர் டெக்கான் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள்
கோவை: கோவை விமான நிலையத்தில் ரன்வேயில் இரு விமானங்கள் மோதிக் கொள்ள இருந்த பெரும் விபத்து பெண் பைலட்டின் துரிதமான செயல்பாட்டால் தவிர்க்கப்பட்டது.
கோவையில் இருந்து டெல்லி செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம் ரன் வேயில் ஓட ஆரம்பித்தது. டேக் ஆப் செய்வதற்காக விமானம் வேகம் பிடிக்க இருந்த நிலையில் அதே ரன்வேயில் பெங்களூர் செல்லும் ஏர் டெக்கான் விமானம் நின்று கொண்டிருப்பதை ஸ்பைஸ் ஜெட்டின் பெண் விமானி கவனித்தார்.
இதையடுத்து அவரச பிரேக்குகளை பிரயோகித்து விமானத்தை நிறுத்தினார். ஏர் டெக்கன் விமானத்தின் அருகே சென்று ஸ்பைஸ் ஜெட் விமானம் நின்றது.
பிரேக்கை பிரயோகிக்காமல் தொடர்ந்து ரன் வேயில் விமானம் ஓடியிருந்தால் இரு விமானங்களின் இறக்கைகளும் மோதிக் கொண்டிருக்கும். இரு விமானங்களிலும் 200 பயணிகள் இருந்த நிலையில் மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவத்தையடுத்து இரு விமானங்களிலும் இருந்த அனைத்து பயணிகளும் இறக்கிவிடப்பட்டனர். பின்னர் ஏர் டெக்கன் விமானத்தில் மோதிவிடாதபடி ஸ்பைஸ் ஜெட் விமானம் அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
இதையடுத்து இரு விமானங்களும் கிளம்பிச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications