துபாயில் இறந்த மேலும் 2 தமிழர்களின் உடல்கள் சென்னை வந்தன
சென்னை: துபாயில் பாலம் இடிந்து விழுந்ததில் பலியான 5 தமிழர்களில் மேலும் 2 பேரின் உடல்கள் விமானம் மூலம் திருச்சி வந்தன.
துபாயில் உள்ள மரினா என்ற இடத்தில் கடந்த 9ம் தேதி பாலம் கட்டும் பணியில் கட்டடத் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது பாலத்தின் ஒரு பகுதி இடிந்து 8 இந்தியர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். இதில் 5 பேர் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள்.
இதில் கார்த்தீபன், அறிவுமொழி, மதியழகன் ஆகியோரது உடல்கள் கடந்த 15ம் தேதி எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும் ஷாஜகான் மற்றும் கோவிந்தன் ஆகியோரது உடல்கள் விமானம் மூலம் நேற்று திருச்சி வந்து சேர்ந்தன. அவர்களின் உடல்களை உறவினர்கள் கண்ணீர் மல்க பெற்றுக்கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.
பலியோர் 5 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.2 லட்சத்தை தமிழக அரசு நிவாரணமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications