அதிமுக பிரமுகரிடம் போலீஸ் விசாரணை: நெல்லையில் கடைகள் அடைப்பு, ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி: திருட்டு நகை வாங்கியது தொடர்பான வழக்கில் போலீஸ் விசாரணைக்காக அதிமுக பிரமுகர் அழைத்து செல்லப்பட்டத்தை கண்டித்து நெல்லையில் 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருநெல்வேலி, வடக்கு ரத வீதியில் நகைக்கடை வைத்திருப்பவர் கணேசன். இவர் அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். கடந்த 14ம் தேதியன்று வி.கே புரம் போலீசார் திருட்டு நகை வாங்கியது தொடர்பாக கணேசனை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
இன்னும் அவர் விடுவிக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து 2 நாட்களுக்கு முன் நெல்லை நகரில் உள்ள அனைத்து நகைக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணைக்கு பிறகு கணேசன் விடுவிக்கப்படுவார் என்று உறுதி கூறினர்.
ஆனால் இன்றுவரை அவர் விடுவிக்கப்படாததால் நெல்லை டவுன் நகைக் கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் கூலக்கடை பஜார், மேலரத வீதி, வடக்கு ரத வீதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
இந்தப் போராட்டத்தால் 200 நகைக்கடைகள் உட்பட 500 மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதனிடையே நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ஏ.கே.செல்வகுமார் தலைமையில் அதிமுகவினர், கணேசனை விடுவிக்கக் கோரி மாவட்ட எஸ்.பி ஸ்ரீதரிடம் மனு கொடுத்தனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications