செங்கல்பட்டு அதிமுக நகர செயலாளர்-உதவியாளர் கொலை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகர அதிமுக செயலாளரும், நகராட்சியின் துணைத் தலைவருமான குரங்கு குமாரும், அதிமுக தொண்டர் ஒருவரும் இன்று பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் அருகே திம்மாவரம் என்ற இடத்தில் இச் சம்பவம் நடந்தது.
நகர அதிமுக செயலாளராகவும் செங்கல்பட்டு நகராட்சியின் துணைத் தலைவராகவும் இருந்தவர் குமார் என்ற குரங்கு குமார் (44). இவரது உதவியாளர் ஆறுமுகம் (38). இருவரும் ஸ்கார்பிேயா காரில் காஞ்சிபுரம் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு வேன் பின்னால் இவர்களது காரை துரத்தி வந்தது. திம்மாவரம் அருகே ஓவர்டேக் செய்து காரை வழிமறித்தது அந்த வேன். அந்த வேனில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய 10 பேர் இருவரையும் சரமாரியாக வெட்டினர்.
காருக்குள் வைத்தே வெட்டப்பட்ட இருவரும் அதிலேயே பலியாயினர். இதையடுத்து வேனில் வந்த கும்பல் தப்பியோடிவிட்டது.
சம்பவம் குறித்து அறிந்தவுடன் ஏராளமான அதிமுகவினர் அங்கு குவிந்தனர். நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட எஸ்பி பெரியய்யா, டிஎஸ்பி செந்தில்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை ஆரம்பித்தனர். உடல்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு பெரும் பதற்றம் நிலவி வருவதால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டன. அரசியல் முன் விரோதம் காரணமாகவே இந்தக் கொலைகள் நடந்துள்ளதாக தெரிகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications