பெரம்பலூர் அருகே மான் வேட்டை-இருவர் தப்பியோட்டம்!
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த இருவர் போலீசாரிடம் இருந்து தப்பியோடிவிட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, நெற்குணம், பாண்டகப்பாடி, பிள்ளங்குளம், போன்ற பல பகுதிகளில் பரந்து விரிந்துள்ளன காடுகள். இங்கு ஏராளமான மான்கள் உள்ளன.
மான் மற்றும் காட்டு விலங்குகள் குடிநீருக்காக கிராமங்களை நோக்கி படையெடுத்து வரும். இந்த நேரங்களில் சிலர் அந்த விலங்குகளை வேட்டையாடி விடுவது தொடர்ந்து வருகிறது.
வனத்துறை அதிகாரிகளும், போலீசாரும் அப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போலீசார் ரோந்து போன நேரத்தில் இருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துள்ளனர்.
ரோந்து வந்த போலீசாரை பார்த்த அவர்கள் எதையோ கீழே போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். போலீசார் சென்று பார்த்ததில் அவர்கள் மான் ஒன்றை வேட்டையாடியது தெரிய வந்தது. வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியையும் பயத்தில் போட்டுவிட்டு சென்றனர்.
போலீசார் அவர்களை பிடிக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை. வேட்டையாடிய மானையும், நாட்டு துப்பாக்கியையும் கைப்பற்றிய போலீசார் தப்பி ஒடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications