மதுரையில் திமுக பகுதி செயலாளர் மகன் படுகொலை
மதுரை: மதுரையில் முன் விரோதம் காரணமாக திமுக பகுதி செயலாளரின் மகன் நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார்.
மதுரை மேலஅனுப்பானடியைச் சேர்ந்தவர் முருகன் 8ம் பகுதி திமுக செயலாளராக இருக்கிறார். இவரது மகன் முத்துக்குமார்(24).
இவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மேல அனுப்பானடி பகுதியில் தனது உறவினர்களுடன் முத்துக்குமார் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வீரபாண்டி தரப்பினர் முத்துக்குமாரை சரமாரியாக கத்தியால் குத்தினர்.
இதில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எதிர்தரப்பை சேர்ந்த வீரபாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் படுகாயமடைந்தனர்.
போலீசார் இதுகுறித்து நடத்திய விசாரணையில்,
கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ஒருவரின் சாவுக்கு காரணமான முத்து என்பவருக்கு தனது தந்தையின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, அவர் தலைமறைவாக இருக்க உதவியதற்காக முத்துக்குமாரை எதிர்தரப்பினர் வெட்டிக் கொன்றதாக தெரியவந்துள்ளது.
நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. மேலும் அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications