அதிமுக நகர செயலாளர் கொலை-போலீசே பொறுப்பு: ஜெயலலிதா
சென்னை: செங்கல்பட்டு அருகே அதிமுக நகர செயலாளர் குமாரும், அவருடைய நண்பரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுகவினரால் தனக்கு அச்சுறுத்தல் உள்ளதால் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று காவல்துறையினரிடம் பலமுறை குமார் புகார் கொடுத்துள்ளார்.
அவற்றை காவல்துறையினர் உதாசீனப்படுத்தியதால், இந்தக் கொடூரச் செயல் இப்போது நடந்துள்ளது. எனவே, இதற்கு காவல்துறையினரே முழு பொறுப்பேற்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு சரிந்து வருவதையே இந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.
படுகொலைக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட குமார், ஆறுமுகம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 கட்சியின் சார்பில் வழங்கப்படும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அதிமுகவின் இருவரும் பூரண நலமடைய பிரார்த்திக்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15,000 வழங்கப்படும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications