மினி பஸ் பெர்மிட்டுக்கு லஞ்சம்: ஆர்.டி.ஓ டிஸ்மிஸ்
திருநெல்வேலி: மினி பஸ் பெர்மிட் வழங்க லஞ்சம் வாங்கியது தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் நெல்லை வட்டார போக்குவரத்து அதிகாரி பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
நெல்லை வாட்டார போக்குவரத்து அலுவலராக (ஆர்டிஓ) பணியாற்றி வந்தவர் ராஜசேகர பாண்டியன். இவர் கடந்த 2000ம் ஆண்டு விருதுநகரில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றினார்.
விருதுநகர், முதலிபட்டி அருகேயுள்ள வெங்கல்நாயக்கன்பட்டியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சிவகுமார் என்பவர் மினி பஸ் இயக்க பெர்மிட் கேட்டு விண்ணபித்தார்.
பெர்மிட் வழங்க ஆர்டிஓ ராஜசேகர பாண்டியன், சிவகுமாரிடம் ரூ.10,000 லஞ்சம் கேட்டார். இதனால் சிவகுமார், விருதுநகர் மாவட்ட லஞ்ச ஓழிப்பு போலீசில் புகார் செய்தார். இந்த வழக்கில் ராஜசேகர பாண்டியன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
அவர் மீதான 7 குற்றசாட்டுகள் ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் முன்பு விசாரணைக்கு வந்தபோது மினி பஸ் பெர்மிட் வழங்க ரூ.10,000 லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ராஜசேகரபாண்டியனை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் தமிழக உள்துறை செயலாளர் மாலதி அவரை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள ராஜசேகர பாண்டியன் இம்மாத இறுதியில் ஓய்வு பெற இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications