தூத்துக்குடியில் போலி மதுபானம் விற்ற பெண் கைது
தூத்துக்குடி: போலி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், குறிப்பாக பாண்டிசேரி, கர்நாடகா, கேரள மாநிலங்களிலிருந்து மது பாட்டில்கள் சமூக விரோதிகளால் கடத்தி வரப்பட்டு பல்வேறு வழியில் திருட்டுத்தனமாக விற்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் பகுதியில் போலி மதுபாட்டில்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இைதயடுத்து விளாத்திகுளம் டி.எஸ்.பி ஷியாமளாதேவி உத்தரவின்பேரில் தருவைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான தனிப்படை போலீசார் தருவைகுளம், வேப்பலோடை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் வேப்பலோடை வடக்குத் தெருவில் உள்ள நடராஜன் என்பவரது மனைவி பார்வதியின் பெட்டிக் கடையில் சோதனை செய்த போது அங்கு 34 அட்டை பெட்டிகளில் 1,713 போலி மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்து பார்வதியை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், வெளிமாநில மது வகைகளை வாங்கி வந்து காலி மது பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதற்கு தருவை குளத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வரும் அவரது சகோதரர் முத்துராஜ் என்வரின் உதவியுடன் பல மாதங்களாக விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
பிடிபட்டுள்ள அனைத்து மது பாட்டில்களிலும் டாஸ்மாக் மது வகைகளில் ஒட்டியிருக்கும் ஹோலாகிராம் ஸ்டிக்கர்களை காணவில்லை. போலீசார் இவை அனைத்திலும் இருந்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் தலைமறைவாக உள்ள பார்வதியின் சகோதரரான் டாஸ்மாக்கில் வேலை பார்க்கும் முத்துராஜை தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications