செளதியில் கேஸ் குழாய் வெடித்து 6 இந்தியர்கள் உட்பட 36 பேர் பலி
ரியாத்: செளதி அரேபியாவில் கேஸ் குழாயில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 இந்தியர்கள் உட்பட 36 தொழிலாளர்கள் பரிதாபமாக தீயில் கருகி இறந்தனர்.
ஹாவியா என்ற பகுதியில் அராம்கோ கேஸ் உற்பத்தி நிலையத்திலிருந்து பல பகுதிகளுக்கு குழாய் மூலம் கேஸ் கொண்டு செல்லப்படுகிறது.
ஹாவியாவில் இருந்து 30 கிமீ தொலைவில், ஹராத்-உத்மானியா என்ற பகுதிகளுக்கிடையில் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் கேஸ் குழாயில் பராமரிப்பு பணியை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது கேஸ் கசிவு காரணமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. கேஸ் குழாய்கள் வெடித்து சிதறியதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.
தீயில் சிக்கி இறந்த தொழிலாளர்களில் பலர் வேலையை முடித்துவிட்டு அங்கேயே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவர்களாம். மேலும் பல தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
பலியான தொழிலாளர்களில் 6 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது. ஆனால் அவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை.
போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் தீ விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications