கொலை வழக்கில் டாக்டர் கிருஷ்ணசாமி நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னை: கல் குவாரி உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தாம்பரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
சென்னையைச் சேர்ந்தவர் தங்க பாண்டியன் திரிசூலம் மலையில் கல்குவாரி நடத்தி வந்தார். புதிய தமிழகம் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்த இவருக்கும், கிருஷ்ணசாமிக்கும் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது.
இந் நிலையில் கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி தங்கபாண்டியனின் ஆதரவாளரான மாடசாமி என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் தூண்டுதலின் பேரில் தான் நடைபெற்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து இந்தக் கொலை தொடர்பாக கிருஷ்ணசாமி உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி கிருஷ்ணசாமி கடந்த மாதம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.
அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராக உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இன்று தாம்பரம் நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி உட்பட 13 பேரும் ஆஜராயினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜனவரி 21ம் தேதி விசாரணையை ஒத்தி வைத்தார்.
நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியில் வந்த கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டு வரும் என்மீது அபாண்டமாக பொய் வழக்கு போட்டுள்ளனர் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications