பரமக்குடியில் பிடிபட்ட பொட்டாஷியம் நைட்ரேட்-புலிகளுக்கு கடத்தப்பட்டதா?
பரமக்குடி: பரமக்குடி அருகே போலீஸ் சோதனையில் பிடிபட்ட வெடிமருந்து மூட்டைள் விடுதலைப் புலிகளுக்கு கடத்தப்பட்டதா என கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வேகமாக சென்ற மினி லாரியை பரமக்குடி அருகே சுந்தனேந்தல் என்ற இடத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மடக்கி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது லாரிக்குள் வெடிமருந்து மூட்டைகள் இருந்தன.
லாரியை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்த போலீசார் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் லாரியில் பிடிபட்ட வெடிமருந்தை மதுரை மற்றும் சென்னைக்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சோதனையில் அது பொட்டாஷியம் நைட்ரேட் என உறுதியானது. சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கியமான மூலப்பொருள் இது.
லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் மதுரை திருமங்கலத்தில் லோடு ஏற்றப்பட்டதாக கூறியுள்ளார். திருமங்கலத்தில் சென்று விசாரணை நடத்தியதில் இந்த வெடிமருந்து மூட்டைகள் சிவகாசியிலிருந்து கொண்டு வரப்பட்டவை என தெரியவந்தது.
இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்த போலீசார் சிவகாசி விரைந்துள்ளனர். இந்த வெடிமருந்து கடத்தலில் முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த வெடிமருந்து விடுதலைப் புலிகளுக்கு வெடிகுண்டுகள் தயாரிப்பதற்காக அனுப்பப்பட்டதா என்று கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications