சென்னையில் கன மழை-சாலைகளில் வெள்ளம்
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கனமழை பெய்தது.
வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான அதிவேக புயலான சிதர் வங்கதேசத்தை தாக்கியது. இதன் தாக்கம் இன்னும் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
சென்னையில் நேற்று மாலை துவங்கிய மழை இன்றும் தொடர்ந்து பெய்து வருகிறது. தொடர் மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது.
வடசென்னை பகுதிகளான மூலக்கடை, கொடுங்கையூர், எம்.கே.பி.நகர், கண்ணதாசன் நகர், வியாசர்பாடி, அயானவரம் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாயுள்ளனர்.
இன்று காலையிலும் தொடர்ந்து பெய்த மழையால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்களும் பெரும் அவதிக்குள்ளாகினர். சென்னை நகரின் சப்-வேக்களில் வெள்ளம் தேங்கியுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை நகரில் மழை தொடர்ந்து நீடித்தால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
புதுச்சேரியில் பலத்த மழை:
புதுச்சேரியில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications