பாலாற்றின் குறுக்கே அணை: ஆந்திர எல்லையில் பாமக ஆர்ப்பாட்டம்
வேலூர்: பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு புதிய அணை கட்டுவதை எதிர்த்து பாமக சார்பில் தமிழ்நாடு-ஆந்திர எல்லையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆந்திர மாநிலம் குப்பம் மண்டபம், கணேசபுரம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு டிசம்பர் 6ம் தேதி ஆந்திர அரசு அடிக்கல் நாட்டுகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த கோரியும், ஆந்திர அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், ஆந்திர எல்லையான காந்திநகரில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாமக எம்.எல்.ஏக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் நடத்த வந்த ஜி.கே. மணி உள்ளிட்ட பாமகவினரை ஆந்திர மாநில எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அதனால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜி.கே. மணி,
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணைகட்டுவது தமிழக மக்களின் குடிநீர் மற்றும் விவசாயிகளின் ஜீவாதார உரிமையை பாதிப்பதாகும். இதைத்தடுக்க வேண்டியது தமிழக மக்களின் கடமையாகும்.
எங்களை ஆந்திர மாநிலத்திற்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியுங்கள், தடுத்து நிறுத்தாதீர்கள். வேண்டுமானால் ஆந்திர மாநில போலீசார் எங்களை தடுக்கட்டும், கைது செய்யட்டும் என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பின் நாங்கள் சட்டத்தையும், தமிழக அரசையும், காவல்துறையையும் மதிக்கிறோம். அதனால் நாங்கள் இங்கேயே ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றார்.
144 தடை உத்தரவு:
இந்த ஆர்ப்பாட்டத்தால் ஆந்திர எல்லையில் அம்மாநில போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். ஏற்கனவே அம் மாநிலத்தில் உள்ள கணேசபுரத்தில் பாமகவினர் சில மாதங்களுக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் இம்முறை கணேசபுரத்திற்குள் அவர்கள் நுழைவதை தடுக்க 144 தடை உத்தரவை ஆந்திர போலீசார் பிறப்பத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தால் தமிழக-ஆந்திர எல்லையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications