சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு குண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
41 நாள் மண்டல பூஜை விழாவையொட்டி சபரிமலை கோவில் கடந்த சனிக்கிழமை (17ம் தேதி) திறக்கப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில் இன்று கோழிக்கோடு நகர காவல்துறை ஆணையருக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசியவன் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சபரிமலையில் வெடிகுண்டு வெடிக்கும் என்று சொல்லி போனை வைத்து விட்டான்.
இதையடுத்து சபரிமலை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர சோதனை நடத்தப்பட்டது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கோவில் வளாகத்தை சுற்றிலும் மோப்ப நாய்களும், வெடிகுண்டு நிபுணர்களும் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications