விபச்சாரம்-4 அரவாணிகள் கைது

Subscribe to Oneindia Tamil


சேலம்: சேலத்தில் விபச்சாரத்துக்கு ஆட்களை அழைத்த 4 அரவாணிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

சேலம் நகரில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சீலநாயக்கன்பட்டி பை-பாஸ், சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் மாலை நேரங்களில் அரவாணிகள் தொல்லை சகிக்க முடியாத அளவுக்குப் போய்க் கொண்டுள்ளது.

பஸ்சுக்கு காத்து நிற்கும் பயணிகளை உல்லாசத்துக்கு அழைத்துச் செல்ல அவர்கள் செய்யும் செயல்கள் அங்கு நிற்பவர்களை நெளிய வைக்கும்.

இவர்களது தொல்லை மிக அதிகமாகிவிட்டதாக புகார்கள் வரவே டிஐஜி செண்பகராமன் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து உதவி கமிஷனர்கள் மோகன் சிங், பிலிப் தாமஸ், இன்ஸ்பெக்டர் ஜெயகரன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்றிரவு இந்தப் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சேலம் பழைய பஸ் நிலையத்தில் 2 அரவாணிகள் வாலிபர்களை உல்லாசத்துக்கு அழைத்துச் செல்வதைப் பார்த்த போலீசார் அவர்களைப் பிடிக்க முயன்றனர்.

ஆனால், ஒரு அரவாணி போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார். கமலி (28) என்ற அரவாணி கைது செய்யப்பட்டார்.

இவர் ஏற்கனவே மகளிர் போலீசை தாக்கிய வழக்கில் கைதானவர் ஆவார்.

அதே போல 5 ரோடு ரவுண்டானாவில் போலீஸ் ஜீப்பைக் கண்ட 4 அரவாணிகள் தப்பி ஓடினர். இவர்களில் 3 பேர் பிடிபட்டுவிட்டனர். ஒருவர் தப்பிவிட்டார்.

பிடிப்பட்ட கமலி, உஷா (30), புவனா (23), மோகனா (24) ஆகியோர் மீது பணம் பறித்தல், அப்பாவிகளை மிரட்டுதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இவர்களை இரவோடு இரவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நால்வரையும் சேலம் மத்திய சிறையில் பெண்கள் பிரிவில் தனி அறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+