காங்கிரசில் குமாரதாஸ்-கட்சியை விட்டு நீக்கிய ஜெ
சென்னை: கன்னியாகுமரி மாவட்ட அதிமுக அவைத் தலைவராக இருந்த முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் காங்கிரசில் சேர்ந்துவிட்டார்.
இதையடுத்து அவரை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் ஜெயலலிதா.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குமாரதாஸ் சுயேச்சையாகவும், ஜனதா தளத்தின் சார்பிலும் கூட போட்டியிட்டு திமுக, அதிமுகவை தோற்கடித்தவர்.
ஹோமியோபதி மருத்துவரான இவர் ஒரு காலத்தில் ஜெயலலிதாவை மிக்க கடுமையாக விமர்சித்து வந்தவர்.
இந் நிலையில் காங்கிரசுக்குப் பேனாார். கடந்த தேர்தலின்போது திடீரென அதிமுகவில் இணைந்தார். முதலில் அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மாவட்ட அவைத் தலைவர் பதவியும் தரப்பட்டது. ஆனாலும் பின்னர் ஒதுக்கி வைக்கப்பட்டார்.
இதனால் எரிச்சலில் இருந்தார் குமாரதாஸ். இந் நிலையில் கடந்த 16ம் தேதி டெல்லியில் ஆஸ்கர் பெர்னாண்டஸ் முன்னிலையில் காங்கிரசில் இணைந்துவிட்டார்.
இந் நிலையில் அவரை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் ஜெயலலிதா.
இது குறித்து அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுகவின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கன்னியாகுமரி மாவட்ட அதிமுக அவைத் தலைவர் கே.குமாரதாஸ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கட்சியினர் யாரும் அவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
இந் நிலையில் காங்கிரசில் இணைந்துள்ள குமாரதாஸ் கூறுகையில்,
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், இளங்கோவன் ஆகியோரை டெல்லியில் சந்தித்துப் பேசி நான் கடந்த 16ம் தேதியே காங்கிரசில் இணைந்து விட்டேன்.
நான் காங்கிரசில் இணைந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இதனால் அதிமுக தலைமை என்னை நீக்க வேண்டிய அவசியமே இல்லை.
அதிமுகவில் நான் அவை தலைவர் பதவியில் இருந்ததே எனக்கு தெரியாது. அந்த கட்சியை விட்டு வந்ததால் பிழைத்து கொண்டேன்.
நான் அதிமுகவில் இணைந்ததே ஒரு அரசியல் விபத்து தான்.
காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து வெளியேறி அதிமுகவில் சேர்ந்ததற்காக பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்.
வரும் டிசம்பரில் நாகர்கோவிலில் நான் காங்கிரசில் முறைப்படி இணையும் விழா நடக்கும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications