தம்பிக்கு பார்வை தர தற்கொலை செய்த அண்ணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பார்வையில்லாத தனது தம்பிக்கு தனது கண்களை தானமாக கொடுப்பதற்காக அண்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், கண்களை அகற்றி தம்பிக்கு பொறுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டதால் கண் தானமும் அண்ணனின் உயிரும் வீணானது.

இச் சம்பவம் சென்னையில் நடந்தது. ஆட்டோ டிரைவரான ரவிக்குமாரின் (26) தம்பி கார்த்திக். நரம்புகளில் ஏற்பட்ட பாதிப்பால் கார்த்திக்கின் கண் பார்வை பாதிக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக பார்வை இழந்து வந்த தம்பியைப் பார்த்து மனம் நொந்தார் அண்ணன்.

தனது கண்களையே தானமாகத் தர முடிவு செய்து நேற்று வீட்டில் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்தக் கடிதத்தில், எனது தம்பிக்கு என் கண்களை பொறுத்தி அவனுக்கு பார்வை தந்துவிடுங்கள் என்று உருக்கமாக எழுதியிருந்தார்.

ஆனால், இந்தக் கடிதத்தை வீட்டினரும் போலீசாரும் கைப்பற்றியபோது இரவாகிவிட்டது. ரவிக்குமார் இறந்து கிட்டத்தட்ட 6 மணி நேரம் கழித்த பிறகே கடிதம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலில் இருந்து கண்களை அகற்றி தம்பிக்குப் பொறுத்த முடியுமா என கீழ்பாக்கம் மருத்துவமனையில் சோதிக்கப்பட்டது. ஆனால், இறந்து வெகு நேரமாகிவிட்டதால் கார்னியா சேதமடைந்துவிட்டது.

இதனால் அந்தக் கண்கள் பயன்படுத்துவதற்கு பயனில்லாமல் போய்விட்டன.

அதே நேரத்தில் கண்களைப் பொறுத்தினாலும் கூட, அவரது நரம்புகளே பாதிக்கப்பட்டுவிட்டதால், கார்த்திக்குக்கு கண் பார்வை திரும்ப வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+