வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகத்தில் இன்றும் மழை தொடரும்
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலின் தென்மேற்குப் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது,
இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. கன்னியாக்குமரி கடல் வளிமண்டலத்தில் உருவான சுழற்சி தொடர்ந்து நீடிக்கிறது.
இந்த இரு காரணங்களால் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று மழை பெய்யும். ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே போன்று, தமிழகத்தின் தென் மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பெய்யும்.
சென்னையில் இன்று வானம் மேக்கூட்டத்துடன் காணப்படும். சென்னையின் சில இடங்களில் கனத்த மழை பெய்யும் என்றார்.
சென்னையில் 50 மி.மீ மழை:
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிக பட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரத்தில் 60 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை நகரின் புறநகர் பகுதிகளான தாம்பரம், விமானநிலையம் ஆகிய இடங்களில் 50 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இதே போன்று கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டனம் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனத்த மழை பெய்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications