நிருபர்களை உதைத்த முகம்மது கைப் மீது வழக்கு
சண்டிகர்: படம் பார்த்து விட்டு வெளியே வந்ததை படம் பிடிக்க முயன்ற பத்திரிகை புகைப்படக்காரரை அடித்து உதைத்த உ.பி. ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டன் முகம்மது கைப் மீது பஞ்சாப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியில் முன்பு இடம் பெற்றிருந்தவர் கைப். தற்போது உ.பி. மாநில ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கிறார். சண்டிகரில் நடந்த ரஞ்சி போட்டியில் பங்கேற்க உ.பி. அணி வந்துள்ளது.
நேற்று மாலை சண்டிகரில் உள்ள ஒரு தியேட்டருக்கு கைப் படம் பார்க்கச் சென்றார். படம் பார்த்து விட்டு அவர் வெளியே வந்தபோது அவரை புகைப்படம் எடுக்க பத்திரிக்கை புகைப்படக்காரர் ஒருவர் முயன்றார். அவருடன் பிற பத்திரிகைகளின் செய்தியாளர்களும் இருந்தனர்.
இதைப் பார்த்ததும் கோபமடைந்த கைப், ஆவேசமடைந்து செய்தியாளர்களைத் தாக்கினார். மேலும் புகைப்படக்காரரை சரமாரியாக அடித்து உதைத்தார். பின்னர் அங்கிருந்து போய் விட்டார்.
கைப்பின் செயலால் அதிர்ச்சி அடைந்த பத்திரிக்கையாளர்கள், கைப் மற்றும் உ.பி. மாநில அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கைப் மன்னிப்பு கேட்க கோரினர். ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என்று கைப் கூறி விட்டார்.
இதையடுத்து பஞ்சாப் மாநில உள்துறைச் செயலாளர் கிருஷ்ணமோகன் வீட்டுக்கு பத்திரிக்கையாளர்கள் படையெடுத்தனர். கைப் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரினர்.
இதையடுத்து கைப் மீது அடி வாங்கிய புகைப்படக்காரர் கொடுத்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு கிருஷ்ணமோகன் உத்தரவிட்டார். இதையடுத்து கைப் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications