6 மாநகராட்சிகளில் நாளை அதிமுக போராட்டம்
சென்னை: சென்னை, மதுரை உள்ளிட்ட 6 மாநகரங்களில் அரசு நடத்தும் மாணவர் விடுதிகளின் மோசமான நிலையைக் கண்டித்து அந்த நகரங்களில் 23ம் தேதி அதிமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 6 மாநகராட்சிகளிலும் அரசு சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்படும் விடுதிகளில் சுகாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இங்கு நிலவும் சுகாதார சீர்கேட்டால், தொற்றுநோய்கள் பரவும் அபாயம் எழுந்துள்ளது. மாணவர்கள் பல்வேறு நோய்களில் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்தியாவின் எதிர்காலமாக கருதப்படும் மாணவர்கள், இப்படிப்பட்ட விடுதிகளில் தங்கியிருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. இங்கு குடிநீர் வசதி மிகவும் மோசமாக உள்ளது. குடிநீரில் சாக்கடை நீரும், கழிவுநீரும் கலந்து வருகின்றன. சமையல் அறைகளுக்குள்ளும் கழிவு நீர் புகுகிறது.
எனது ஆட்சியின்போது அரசு நடத்தும் மாணவர் விடுதிகளை ஐந்து நட்சத்திர அந்தஸ்துடன் வைத்திருந்தேன். மாணவர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி, தங்களது படிப்புகளில் முழு கவனம் செலுத்த முடிந்தது.
தற்போதைய திமுக ஆட்சியில் நிலவும் இந்த அவல நிலையைக் கண்டித்து அதிமுக மாணவர் அணி சார்பில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய ஆறு மாநகராட்சிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
நெல்லையில் ஓ.பன்னீர் செல்வம், சென்னையில் டி.ஜெயக்குமார், கோவையில் பொள்ளாச்சி ஜெயராமன், சேலத்தில் கே.பழனிச்சாமி, திருச்சியில் சிவபதி, மதுரையில், ஆர்.பி.உதயக்குமார் ஆகியோர் போராட்டத்திற்குத் தலைமை தாங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications