கூலிப் படைகளை ஒடுக்க போலீஸ் அதிகாரிகளுடன் கருணாநிதி ஆலோசனை

இன்று மாலை கோட்டையில் நடக்கும் இக் கூட்டத்தில் டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை தீவிரமாக பராமரிப்பது, ரெளடிகளை ஒழிப்பது, கூலிப் படைகளை அடக்குவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள சென்ற காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ஈட்டியால் குத்தப்பட்டது, சத்தியமூர்த்தி பவனுக்குள் வைத்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் பட்டா கத்தியால் வெட்டப்பட்டது,
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைச்செல்வன் வெட்டிக் கொலை செய்யப்பட்து, செங்கல்பட்டு அதிமுக நகரச் செயலாளரும் நகரமன்ற துணை தலைவருமான குமார் உள்ளிட்ட 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது ஆகிய சம்பவங்களில் கூலிப் படைகளுக்கு தொடர்புள்ளது தெரியவந்துள்ளது.
இந் நிலையில் தான் கூலிப் படைகள், ரெளடிகளை ஒழிப்பது குறித்து இன்று காவல்துறை அதிகாிரகளுடன் ஆலோசிக்கவுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications