குடிபோதையில் குழந்தையைக் கொன்ற கொடூர தந்தை
சிவகாசி: சிவகாசியில் குடிபோதையில் பெற்ற குழந்தையையே தரையில் வீசி கொன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசியை அடுத்த தாயில்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். சிவக்குமாருக்கு மாதாகனி என்ற மனைவியும், மூன்று மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளது.
சிவக்குமாருக்கு குடிக்கும் பழக்கம் உண்டு. குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடிக்கடி அடிப்பாராம். பணம் கேட்டு கொடுமைப்படுத்துவார்.
இந்த நிலையில் சம்பவ தினத்தன்று வழக்கம் போல குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு மாதாகனி பணம் தர மறுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த சிவக்குமார் தொட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்த பிஞ்சு குழந்தையை தூக்கி வெறித்தனமாக தரையில் வீசியுள்ளார்.
எந்தத் தவறையும் செய்யாத அந்த அப்பாவிக் குழந்தை பலத்த அடிபட்டு உயிரிழந்தது.
தகவல் அறிந்த வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் விரைந்து வந்து சிவக்குமாரை கைது செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications