சிறுவனாக இருந்தபோது அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனை செல்லும்: உயர்நீதிமன்றம்
சென்னை: 16 வயதாக இருந்தபோது 12 வயது சிறுமியைக் கற்பழித்துக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.
தர்மபுரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்தவர் கங்காதரன் (27). இவருக்கு 16 வயதாக இருந்தபோது கடந்த 1996ம் ஆண்டு 12 வயது சுமித்ரா என்ற சிறுமியைக் கற்பழித்துக் கொலை செய்தார்.
கைது செய்யப்பட்ட கங்காதரன் மீது தர்மபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்தது. இந்த வழக்கை விசாரித்த தர்மபுரி செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த 2001ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கங்காதரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து கங்காதரன் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். தனது மனுவில், குற்றம் செய்தபோது எனக்கு 16 வயதுதான் ஆனது. எனவே சட்டப்படி சிறார் நீதிமன்றத்தில்தான் இந்த வழக்கை விசாரித்திருக்க வேண்டும். மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடத்தியது செல்லாது, தண்டனையும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முருகேசன், பெரியகருப்பையா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தபோதே, அதை சிறார் நீதிமன்றத்திற்கு மாற்ற மனுதாரர் கோரியிருக்க வேண்டும். ஆனால் அதை அவர் அப்போது செய்யவில்லை.
மேலும், அவருக்கு 21 வயது ஆனபோதுதான் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. எனவே அந்தத் தண்டனை சரியானதுதான். எனவே அதை ரத்து செய்ய முடியாது என்று கூறி கங்காதரனின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications