செங்கை. அதிமுக பிரமுகர் கொலை - 8 பேர் கைது
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகர அதிமுக செயலாளர் குரங்கு குமார் மற்றும் அவரது நண்பர் ஆறுமுகம் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு நகர அதிமுக செயலாளராக இருந்தவர் குமார் என்கிற குரங்கு குமார். இவரும், இவரது நண்பர் ஆறுமுகமும் கடந்த 14ம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். பழிவாங்கும் வகையில் இந்தக் கொலைகள் நடந்ததாக கூறப்பட்டது.
குற்றவாளிகளை போலீஸார் பல்வேறு தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஹெல்மட் அணிந்தபடி ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அந்த நபரை போலீஸார் நிறுத்த முயன்றனர். ஆனால் அவர் துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓட முயன்றார். இதையடுத்து போலீஸார் துப்பாக்கி முனையில் அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
அந்த நபருக்குப் பின்னால் வந்த காரையும் போலீஸார் மடக்கி நிறுத்தினர். அந்தக் காரில் 7 பேர் இருந்தனர். அவர்களையும் துப்பாக்கி முனையில் கீழே இறக்கினர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பிரபல ரவுடி ரவி என்கிற ரவி பிரகாஷ் என்று தெரிய வந்தது. இந்தக் கும்பல்தான் குரங்கு குமாரையும், ஆறுமுகத்தையும் கொலை செய்தது என்றும் தெரிய வந்தது.
குமார் மற்றும் ஆறுமுகத்தை கொலை செய்ததை ரவி பிரகாஷ் ஒத்துக் கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு குமாரின் தம்பி கொலை செய்யப்பட்டார். அந்த கொலைச் சம்பவத்தில் ரவி பிரகாஷும் ஒரு குற்றவாளி. இந்த வழக்கில் குமார் முக்கிய சாட்சியாக இருந்து வந்தார். எனவே அவரைத் தீர்த்துக் கட்டி விட்டால் வழக்கிலிருந்து தப்பலாம் என்பதால் இந்தக் கொலையை திட்டமிட்டுச் செய்ததாக ரவி பிரகாஷ் தெரிவித்தார்.
இதையடுத்து 8 பேரையும் கைது செய்த போலீஸார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.
குற்றவாளிகளை விரைவில் பிடித்ததற்காக தனிப்படை போலீஸாருக்கு காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. பெரியய்யா பாராட்டு தெரிவித்தார்.
இந்தக் கொலை வழக்கில் மேலும் 3 பேர் தேடப்பட்டு வருகின்றனர். இவர்களில் 2 பேர் திருச்சியைச் சேர்ந்தவர்கள். எனவே அவர்களைப் பிடிக்க திருச்சிக்கு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications