கருணாநிதிக்கு தமுமுக பாராட்டு விழா
சென்னை: முஸ்லீம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அறிவிப்பு தங்களுக்குத் திருப்தி அளிப்பதாக தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் தமுமுக தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா கூறுகையில், தற்போதுள்ள சூழ்நிலையில், முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தலா 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை திமுக அரசு அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது, வரவேற்புக்குரியது. இதை சிறந்த ஏற்பாடாக நாங்கள் கருதுகிறோம்.
பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு தமிழக அரசு வழங்கும் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலவையில் உள்ள நிலையில் சிறுபான்மையினருக்கு இந்த அளவில்தான் இட ஒதுக்கீடு அளிக்க முடியும்.
மேலும், 69 சதவீத இட ஒதுக்கீடு என்பதை 50 சதவீதமாக குறுக்கவும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது என்பதையும் சிறுபான்மையினர் மறந்து விடக் கூடாது.
சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லீம் சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்ட முதல்வர் கருணாநிதியைப் பாராட்டி நவம்பர் 24ம் தேதி சென்னையில் நன்றி தெரிவிக்கும் மாநாடு நடத்தப்படவுள்ளது.
இட ஒதுக்கீடு கோரி 15 மாவட்ட மாநாடுகளை நாங்கள் நடத்தினோம். பல்வேறு போராட்டங்களையும் நடத்தி பலரும் சிறை சென்றுள்ளனர். எனவே தற்போது கிடைத்துள்ள இட ஒதுக்கீட்டை கொண்டாட நேரம் வந்துள்ளது.
நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார். மேலும், சிறுபான்மையனர் பேரமைப்பின் தலைவர் பீட்டர் பெர்னாண்டோ, ஒருங்கிணைப்பாளர் எஸ்ரா.சற்குணமும் பங்கேற்றுப் பேசவுள்ளனர் என்றார் ஜவாஹிருல்லா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications