காலி குடங்களுடன் கலெக்டரை முற்றுகையிட்ட பெண்கள்
வாசுதேவநல்லூர்: குடிநீர் விநியோகம் செய்யபடாத நிலையிலும் பேரூராட்சிக்கு குடிநீர் கட்டணம் செலுத்தி வருவதாக கூறி பெண்கள் கலெக்டரை முற்றுகையிட்டதால் வாசுதேவநல்லூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதியில் குடிநீர் தேவைக்காக ஊருக்கே மேற்கே 5 கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2,500 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து பொதுமக்கள் குடிநீர் இணைப்பு பெற வைப்புக் தொகை செலுத்தி விண்ணப்பித்தனர். இதில் 1,500 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிதாக கொடுக்கப்பட்ட இணைப்புகளில் சீராக குடிநீர் விநியோகிக்கப்பதில்லை என 6,7,8வது வார்டு பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இது குறித்த பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஆய்வு செய்ய வந்த கலெக்டர் பிரகாஷை அப்பகுதி பெண்கள் காலிகுடங்களுடன் முற்றுகையிட்டனர்.
கடந்த 9 மாதங்களாக தண்ணீர் வராமல் குடிநீர் கட்டணம் செலுத்தி வருவதாகவும், ஆனால் குடிநீர் விநியோகம் சீராக இருப்பதில்லை என்று கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் பால்ராஜிடம் உடனடியாக குடிநீர் சீராக வினியோகம் செய்திட தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் பிரகாஷ் உத்தரவிட்டதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications