வளைகுடா நாடுகளுக்கும் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் சேவை

இதுகுறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் லோக்சபாவில் அளித்த எழுத்துமூலமான பதிலில்,
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், கேரளாவிலிருந்து அபுதாபி, மஸ்கட், ஷார்ஜா, துபாய், தோஹா, பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கும், அகதமாபாத் மற்றும் கோவாவிலிருந்து துபாய்க்கும் விமான சேவையை மேற்கொள்ளும்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்த விமான சேவை தொடங்கும்.
தற்போது இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு 95 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் ஜெய்ப்பூர் மற்றும் லக்னோவிலிருந்து துபாய்க்கு விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டது என்றார் படேல்.
யுஏஇயின் புதிய விமான சேவை
இதற்கிடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் ராசல் கைமா ஏர்லைன்ஸ் என்னும் புதியதொரு விமான சேவை இம்மாத இறுதியில் துவங்க உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஒரு பகுதி ராசல் கைமா. இங்கு ராசல் கைமா ஏர்லைன்ஸ் (RAK Airways) எனும் விமான சேவை இம்மாத இறுதியில் துவங்கப்பட உள்ளது. நவம்பர் 29ம் தேதி துவங்கும் இவ்விமான சேவை ஆரம்பத்தில் பெய்ரூட்டிற்கு வாரத்திற்கு மூன்று முறை செல்லும்.
பின்னர் பங்களாதேஷ், இலங்கை, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளுக்கு விரிவுபடுத்தும் திட்டம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பகுதிகளுக்கும் இந்த விமான சேவை தனது சிறகை விரிக்க திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications