உ.பியில் தொடர் குண்டுவெடிப்பு: 13 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

Uttar Pradesh Map
வாரணாசி: உத்தரப் பிரதேசத்தில் இன்று 3 இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பில் 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

பகல் 1 மணியளவில் லக்னெள, பைசாபாத் நகரங்களில் உள்ள நீதிமன்ற வளாகங்களிலும், வாரணாசி கலெக்டர் அலுவலக வளாகத்திலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

இந்த குண்டுவெடிப்பில் 13 பேர் வரை பலியாகியுள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த இடங்களில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

9 பேர் வாரணாசியும் 4 பேர் பைசாபாத்திலும் பலியாகியுள்ளனர். இச் சம்பவத்துக்கு இந்தியன் முஜாகிதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000மும் நிதியுதவி வழங்கப்படும் என உபி முதல்வர் மாயாவதி அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+