மே.வங்கத்திலிருந்து தஸ்லிமா வெளியேற்றம்: ராஜஸ்தான் கைவிரிப்பு-டெல்லியில் தஞ்சம்

Subscribe to Oneindia Tamil

Taslimaகொல்கத்தா: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் மேற்கு வங்கத்தில் தங்க கடும் எதிர்ப்பும், கலவரமும் வெடித்துள்ள நிலையில் அவர் ராஜஸ்தானுக்குச் சென்றார். ஆனால், அந்த மாநில பாஜக அரசு அவருக்கு பாதுகாப்பு தரமுடியாது என்று கூறிவிட்டதால், அவர் டெல்லியில் தஞ்சம் புகவுள்ளார்.

வங்காள தேசத்தை சேர்ந்த எழுத்தாளரான தஸ்லிமா இஸ்லாமிய மதத்துக்கு எதிராக கருத்துகளை எழுதியதாகக் கூறி அவரை கடந்த 1994ம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேற்றியது வங்க ேதசம்.

இதையடுத்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். கொல்கத்தாவில் தங்கியிருந்தார். இந் நிலையில் தஸ்லிமாவை இந்தியாவை விட்டு வெளியேற்றக் கோரி கொல்கத்தாவில் முஸ்லீம்கள் அமைப்பு நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது.

இந் நிலையில் தஸ்லிமா ராஜஸ்தான் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவராக போனாரா அல்லது மேற்கு வங்க அரசே அனுப்பியதா என்று தெரியவில்லை.

போபாலில் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள தஸ்லிமாவுக்கு தங்களால் போதிய பாதுகாப்பு வழங்க முடியாது என ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துவிட்டது.

இதையடுத்து அவர் டெல்லியில் தஞ்சமடைய முடிவு செய்துள்ளார்.

இந் நிலையில் தஸ்லிமா மீண்டும் கொல்கத்தாவுக்கே கிளம்பிவிட்டதாக கடைசியாக வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+