பல்வேறு மோதல்களில் 23 விடுதலைப் புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் நடந்த கடும் சண்டையில் 23 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள அடம்பன் என்ற இடத்தில் நடந்த சண்டையில் விடுதலைப் புலிகளும், ராணுவத்தினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இந்த மோதலில் 5 புலிகள் கொல்லப்பட்டனர்.
அதே மன்னார் மாவட்டத்தில் இன்னொரு பகுதியில் நடந்த தாக்குதலில் 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். கிழக்கு திரிகோணமலையில் பழத்தொப்பூர் என்ற இடத்தில் நடந்த இன்னொரு மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
முகமலை பகுதியில் விடுதலைப் புலிகளின் பதுங்குமிடம் ஒன்று தகர்க்கப்பட்டது. இதில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்தார். விடுதலைப் புலிகள் தரப்பில் 6 பேர் உயிரிழந்தனர்.
மன்னார் மாவட்டம் விளாத்திகுளத்தில் நடந்த மற்றும் ஒரு சண்டையில் 7 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications