சங்கரன்கோவில்-தேவர் சிலையை உடைத்த மூவருக்கு குண்டாஸ்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே தேவர் சிலை உடைப்பில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலாயுதபுரத்தில் கடந்த 4ம் தேதி தேவர் சிலை உடைக்கப்பட்டதையடுத்து சாலை மறியல், கல் வீச்சு சம்பவங்கள் நடந்தது.
இது தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து 26 பேரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சிலை உடைப்பு சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.
அதில் குருசாமி, முருகன், காளிராஜ் ஆகிய 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சம்சுதீன் ஆகியோர் சங்கரன்கோவில் துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு பரிந்துரை செய்தனர்.
அவர் அந்த மனுவை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரனுககு அனுப்பி வைத்தார். அந்த மனு நெல்லை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து கலெக்டர் பிரகாஷ் உத்தரவின்பேரில் அந்த 3 பேரையும் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications