கடலூரில் கடல் கொந்தளிப்பு-மீனவர் பலி, 5 பேர் மீட்பு
Subscribe to Oneindia Tamil

கடலூர் மாவட்டம் சோனாங்குப்பம் மீனவர் கிராமத்தைச் ேசர்ந்த ஆறு மீனவர்கள் இன்று காலை பைபர் கிளாஸ் படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது திடீரென கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இதனால் அவர்களது படகு தடுமாறி கடலில் மூழ்கியது. இதில் ஒரு மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்கள் விரைந்து சென்று கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மற்ற ஐந்து பேரையும் பத்திரமாக மீட்டனர்.
உயிரிழந்த மீனவரின் உடல் உடனடியாக மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.












Click it and Unblock the Notifications