பஸ் எரிப்பு வழக்கு: அப்பீல் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை: தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 28 பேர் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
தர்மபுரியில் கடந்த 2000மாவது ஆண்டு கோவை வேளாண் பல்கலைக்கழகப் பேருந்து அதிமுகவினரால் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த பயங்கர சம்பவத்தில் 3 மாணவிகள் உயிரோடு கருகி இறந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சேலம் செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் 3 பேருக்கு தூக்குத் தண்டனையும், 25 பேருக்கு தலா 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து 28 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர். அதில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.
அதேசமயம், 7 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கும் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரி பலியான மாணவி கோகிலவாணியின் தந்தை மேல் முறையீடு செய்திருந்தார்.
28 பேரின் மனுக்களையும் விசாரித்த நீதிபதிகள் முருகேசன், பெரியகருப்பையா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications