முரசொலி மாறன் நினைவு நாள் - கருணாநிதி அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் கருணாநிதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
முரசொலி மாறனின் 4வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிது. இதையொட்டி சென்னை முரசொலி அலுவலக வளாகத்தில் உள்ள முரசொலி மாறன் சிலைக்கு முதல்வர் கருணாநிதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
சிலை முன்பு மெளனமாக மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தியபோது முதல்வரின் கண்கள் சோகத்தில் பணித்திருந்தன.
முதல்வருடன் அமைச்சர்கள், திமுக முன்னணியினர், பெரும் திரளான தொண்டர்களும் வந்திருந்து அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications