அரசு விதியை காற்றில் பறக்க விட்ட திருமாவளவன்!
மதுரை: மதுரையில் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட காரில் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அரசின் விதியை காற்றில் பறக்கவிட்டார்.
மதுரையில் விடுதலை சிறுத்தைகளின் சார்பில், று முதுகுளத்தூரில் வெட்டப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் வின்சென்ட் சாம்சன் மனைவிக்கு அரசு வேலை கேட்டும், முதுகுளத்தூரில் உள்ள தலித் மக்கள் மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
இதில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட காரில் வந்தார். பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதை ரசித்து வேடிக்கை பார்த்தனர்.
மாநில முதல்வர், அமைச்சர்கள், நீதிபதிகள், உயர் காவல்துறை அதிகாரிகள் போன்ற முக்கிய பதவியில் உள்ளவர்கள் மட்டுமே சிவப்பு விளக்கு மற்றும் சைரன் பொருத்திய காரில் வருவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இந் நிலையில் அரசு விதியை மீறியுள்ளார் திருமா.












Click it and Unblock the Notifications