கரடிகளுடன் கட்டிப் புரண்டு சண்டை போட்ட தொழிலாளி
கோவை: சத்தியமங்கலம் அருகே இரு கரடிகளுடன் கட்டிப் புரண்டு சண்டை போட்ட கூலித் தொழிலாளி படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சத்தியமங்கலம், சிக்கூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சிவநயன். இவரது நண்பர் மாதேவன். இருவரும் கர்லைன் என்ற இடத்திற்கு கூலி வேலைக்கு சென்றனர்.
இருவரும் காட்டுப் பகுதியில் சென்றபோது, திடீரென கரடிகள் குறுக்கிட்டன. இதைப் பார்த்த மாதேவன் தப்பி புதருக்குள் பதுங்கினார். ஆனால் சிவநயன் மட்டும் 3 கரடிகளிடம் சிக்கிக் கொண்டார்.
இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கரடிகளுடன் கட்டிப் புரண்டு சண்டை போட்டுத் தப்பப் பார்த்தார். ஆனால் கரடிகள் அவரை கடித்துக் குதறின. இதனால் கால்களிலும், தலையிலும் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் கரடிகள் ஓடி விட்டன. இதையடுத்து மாதேவன் ஓடி வந்து சிவநயனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். கோவை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவநயன் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிவநயன் காட்டு விலங்குகளிடம் சிக்குவது இது முதல் முறையல்ல. முன்பு பலமுறை காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட சில விலங்குகளிடம் சிக்கி இதுபோல சண்டை போட்டுத் தப்பியுள்ளார். இந்த முறை கரடிகளிடம் சிக்கிக் கொண்டார்.
மேலும் சந்தனக் கடத்தல் வீரப்பன் இருந்தபோது, இவரும் மேலும் 6 பேரும் காட்டுக்குள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது வீரப்பன் கும்பல் இவர்களை போலீஸ் உளவாளிகள் என நினைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் சிவநயன் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் மற்ற 6 பேரும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications