மருத்துவ மாணவர் விவகாரத்தில் காலம் கடத்தும் கருணாநிதி - ஜெ.

Subscribe to Oneindia Tamil
Jayalalitha
சென்னை: மருத்துவ மாணவர்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தீர்வு காண முயற்சிப்பதாக சொல்லி காலம் கடத்துகிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ மாணவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்யும்படி பிரதமருக்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கருணாநிதி கடிதம் எழுத இருப்பதாகவும், அதனடிப்படையில் மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால் பல இடங்களில் மருத்துவ மாணவ, மாணவிகள் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மருத்துவ மாணவர்களுக்கு ஆதரவாக நான் அறிக்கை விடுத்ததும், கருணாநிதி அவசர அவசரமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை அழைத்து பேசி போராட்டம் வாபஸ் என்று அறிவிக்கச் செய்திருக்கிறார்.

மாணவர்களின் உணர்வுகளை புரிந்திருந்தால் பிரதமருடனும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருடனும் கருணாநிதி பேசி அந்த திட்டத்தை கைவிட்டதாக அறிவிக்கச் செய்திருக்க வேண்டும்.

ஆனால் அதை விட்டு விட்டு கடிதம் எழுதுகிறேன் என்று சொல்வது காலம் கடத்தும் செயல். மத்திய அரசு அல்லது நல்வாழ்வுத்துறை அமைச்சர் இந்த திட்டம் கைவிடப்பட்டது என்று உறுதியளிக்கும் வரையில் மாணவர்களின் போராட்டத்துக்கு அதிமுக ஆதரவு தொடரும் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+