கயத்தாறு அருகே நாட்டாமைகள் மோதல் - ஒருவர் காது 'கட்'
கயத்தாறு: நெல்லை மாவட்டம் கயத்தாறு அருகே தலையால் நடந்தான்குளம் என்ற கிராமத்தில் இரு நாட்டாமைகளுக்கு இடையே நடந்த மோதலில் ஒருவரது காது கடித்துத் துப்பப்பட்டது.
தலையால் நடந்தான்குளம் கிராமத்தில் நாட்டான்மைகளாக இருப்பவர்கள் சின்ன இசக்கிமுத்து, ஆறுமுகம். இரண்டு பேரும் கார்த்திகை தீபவிழா வழிபாட்டிற்காக ஊரில் வரி வசூல் செய்தனர். அப்போது சின்ன இசக்கிமுத்து ஆறுமுகத்திடம் பழைய வரி வசூல் ரூபாய் 500ஐ கேட்டுள்ளார்.
இதில் இரண்டு பேருக்கும் இடையே தகராறு வந்தது. ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டனர். அப்போது ஆறுமுகத்தின் உறவினர் செல்லத்துரை அங்கு வந்தார். அவர் சின்னஇசக்கிமுத்துவின் 2 கைகளையும் பின்னால் பிடித்துக் கொண்டார்.
அப்போது ஆறுமுகம், வரியா கேட்கிறாய், உனக்கு இனி காதே கேட்கக் கூடாது என்று கூறி சின்ன இசக்கிமுத்துவின் வலது காதை கடித்து துப்பினார்.
காது பறிபோனதால் வலியால் துடித்த சின்ன இசக்கிமுத்து ரத்தம் சொட்ட சொட்ட துண்டிக்கப்பட்ட காதை ஒரு கையில் எடுத்துக் கொண்டு கயத்தாறு போலீஸ் நிலையம் வந்தார்.
அங்கு போலீஸாரிடம் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குபதிவு செய்து காதைக் கடித்த ஆறுமுகத்தையும், செல்லத்துரையையும் தேடி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications