பெண் டாக்டரிடம் ரூ. 1 கோடி மோசடி செய்த பெண் டாக்டர்
சென்னை: சென்னையில் பெண் டாக்டரிடம் ரூ. 1.13 கோடி மோசடி செய்ததாக இன்னொரு பெண் டாக்டர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் சித்ரா இன்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில்,
என் சொந்த ஊர் தஞ்சாவூர். எனது ஊரைச் சேர்ந்தவரும் இப்போது சென்னை கொட்டிவாக்கத்தில் மருத்துவமனை வைத்து நடத்தி வருபவருமான மாயா ராம் என்ற பெண் டாக்டர் நட்புரீதியாக பழகினார்.
எனக்கும் சொந்தமாக மருத்துவமனை கட்டும் ஆசை இருந்தது. என் விருப்பத்தை மாயாவிடம் சொன்னேன். அதற்கு உதவுவதாகக் கூறினார்.
தனக்கு வெளிநாட்டில் அறக்கட்டளை நடத்துவோரைத் தெரியும் என்றும், இந்தியாவில் தொழில் தொடங்க அவர்களிடமிருந்து ரூ. 500 கோடி முதல் ரூ. 3000 கோடி வரை கடன் வாங்கி தர முடியும் என்றும் கூறினார்.
பிரான்ஸ் நாட்டில் ஒரு அறக்கட்டளை இருப்பதாகவும், அதனிடமிருந்து ரூ. 500 கோடி பணம் வாங்கித் தருவதாகவும் கூறிய அவர் அதற்கு முன் கூட்டி அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என்றார்.
அவரை நம்பிய நான் பணம் கொஞ்சம் கொஞ்சமாக ரூ. 1.13 கோடியேயை தந்தேன். ஆனால், நெடுநாட்கள் ஆகியும் கடன் தொகை வரவில்லை. மாயாவிடம் கேட்டபோது அவர் சரியான பதில் தரவில்லை.
இந் நிலையில் என்னை சந்திப்பதைத் தவிர்த்தார். ஒரு கட்டத்தில் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவரை நீண்ட முயற்சிக்குப் பின் செல்போனில் தொடர்பு கொண்டு பணத்தை திருப்பிக் கேட்டேன். ஆனால், அவர் தரவில்லை.
எனது 1.13 கோடியை அவரிடமிருந்து திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தனது மனுவில் டாக்டர் சித்ரா கூறியுள்ளார்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரை விசாரணை நடத்த கமிஷ்னர் உத்தரவிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications