இந்தியாவின் நண்பனா இலங்கை? - நாஞ்சில் சம்பத் சவால்!
ஈரோடு: இலங்கை அரசு ஒருபோதும் இந்தியாவுக்கு சாதகமாக இருந்ததே இல்லை. அப்படி இருந்ததாக யாராவது நிரூபித்தால், நான் பேசுவதையே நிறுத்தி விடுகிறேன் என்று மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் சவால் விட்டுள்ளார்.
ஈரோட்டில் நடந்த மதிமுக சார்பில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட நாஞ்சில் சம்பத் பேசுகையில், தமிழகத்தில் இன்று விலைவாசி விஷம் போல் ஏறிக்கொண்டே இருக்கிறது. கடந்த ஆட்சியில் ரூ.140 ஆக இருந்த சிமெண்ட் மூட்டை இன்று ரூ.300 ஆகிவிட்டது.
கட்டட மணல் லோடு ரூ.1,400 ஆக இருந்தது இப்போது ரூ.6,000 ஆகிவிட்டது. இப்படியிருந்தால் சாதாரண மக்கள் வீடு கட்ட முடியுமா.
தேங்காய் விலை அடியோடு சரிந்து விட்டது. இதனால் தென்னை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழர்களுக்காக போராடும் விடுதலைப் புலிகளுக்கான தடையை நீக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். அதைப் பேசினால் நாங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கிறோம் என்கிறார்கள்.
இலங்கை எப்போதுமே இந்தியாவுக்கு சாதகமாக இருந்ததே கிடையாது. அப்படி என்றைக்காவது சாதகமாக இருந்த விஷயத்தை சொல்ல சொல்லுங்கள். நான் இனிமேல் பொதுக்கூட்ட மேடையில் பேசுவதையே நிறுத்திக் கொள்கிறேன் என்றார் நாஞ்சில் சம்பத்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications