சாம்பசிவ ராவ் கமிட்டியை புறக்கணித்த மருத்துவ மாணவர்கள்
சென்னை: மருத்துவ மாணவர்களுக்கு கட்டாய கிராமப்புற சேவை திட்டம் தொடர்பாக கருத்து கேட்க வந்த டாக்டர் சாம்பசிவ ராவ் கமிட்டியை மருத்துவ மாணவ-மாணவிகள் புறக்கணித்தனர்.
எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர்கள் 5 1/2 ஆண்டுகள் படிப்பை முடித்த பின்னர் கட்டாயமாக கிராமப்புறப் பகுதிகளில் ஒரு வருடம் சேவை செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

இதனை அமல்படுத்தும் முன் மருத்துவ மாணவ-மாணவிகளிடம் கருத்து கேட்க டாக்டர் சாம்பசிவ ராவ் கமிட்டி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
இந்த கமிட்டியினர் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கருத்து கேட்ட பின்னர் இன்று காலை சென்னை வந்தனர்.
மருத்துவ மாணவர்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்க முயன்றனர். ஆனால் அந்த கமிட்டியினரை சந்திக்க மருத்துவ மாணவ-மாணவிகள் மறுத்து விட்டனர்.
மாணவர்களின் பிரதிநிதிகள் கூறுகையில்,
எங்கள் போராட்டத்தை சமாளிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் டாக்டர் சாம்பசிவ ராவ் கமிட்டியை கேடயமாக பயன்படுத்துகிறார். அதனால் இந்த கமிட்டி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றனர்.












Click it and Unblock the Notifications