ராணுவ தளபதி பதவியிலிருந்து விலகினார் முஷாரப்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவ தளபதி பதவியிலிருந்து அதிபர் முஷாரப் இன்று பதவி விலகினார்.
கடந்த 1998ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ராணுவ தளபதி பொறுப்பை ஏற்றவர் முஷாரப். பின்னர் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு ராணுவ அடக்குமுறை மூலம் அந்நாட்டு அதிபர் பதவியை கைப்பற்றினார்.
அதிபர் பதவி மற்றும் ராணுவ தளபதி பதவி இரண்டையும் வகித்து வந்தார். இந்நிலையில் முஷாரப் ஒரு பதவியை மட்டும் தான் வகிக்க வேண்டும் என்று பாகிஸ்தானில் அவருக்கு எதிராக போராட்டங்கள் எழுந்தன.
இைதயடுத்து முஷாரப் ராணுவ தளபதி பதவியை விட்டு விலக முடிவு செய்தார். அதன்படி இன்று காலை தனது ராணுவ தளபதி பதவியிலிருந்து விலகிய முஷாரப், ஜெனரல் ரஷ்பக் பர்வேஸ் கியானியிடம் ராணுவ தளபதி பதவியை ஒப்படைத்தார்.
இது தொடர்பாக ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடந்த விழாவில் முஷாரப் பேசியதாவது,
ராணுவம் தான் என் உயிர் மூச்சு. ராணுவ உடை அணிந்திருக்கும்போது எனது உயிர் பிரிய வேண்டும் என்று நினைத்தேன். கடந்த 9 வருடங்களாக ராணுவ தளபதி பதவியில் இருந்துவிட்டு தற்போது விலகுகிறேன் என்று மிக உருக்கமாக பேசினார்.
அந்நாட்டு உச்ச நீதிமன்றம் முஷாரப் பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லும் என்று ஏற்கனவே அறிவித்து விட்டதால், நாளை பாகிஸ்தான் அதிபராக முஷாரப் மீண்டும் பதவியேற்க இருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications