அதிகரிக்கும் ரூபாய் மதிப்பால் திணறும் சாப்ட்வேர் நிறுவனங்கள்
பெங்களூர்: அதிகரித்து வரும் ரூபாயின் மதிப்பால் சாப்ட்வேர், பிபிஓ, கால்சென்டர் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு டாலருக்கு சில ஆண்டுகளுக்கு முன் வரை ரூ. 48 வரை இருந்த ரூபாயின் மதிப்பு இப்போது ரூ. 39 ஆகிவிட்டது. டாலரின் மதிப்பில் ஏற்பட்டுள்ள இந்த சரிவால் ஏற்றுமதியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்தியாவில் அன்னிய முதலீடுகள் அதிகரித்ததே ரூபாயின் மதிப்பு அதிகரித்ததற்கு முக்கிய காரணமாகும். இதனால் முன்பு ஒரு டாலர் ஈட்டினால் ரூ. 48 ரூபாய் சம்பாதித்த நிறுவனங்கள் இன்று வெறும் ரூ. 39 தான் ஈட்டுகின்றன.
இதனால் திருப்பூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர். டாலர் சிக்கலில் இருந்து தப்பிக்க ஐரோப்பிய யூரோவை நாட ஆரம்பித்துவிட்டன. தங்களது வர்த்தகத்தை யூரோவில் நடத்த ஆரம்பித்துள்ளன.
ஆனால், பெரும்பாலான சாப்ட்வேர், பிபிஓ, கால்சென்டர் நிறுவனங்களில் டாலரில் தான் வர்த்தகம் நடக்கிறது. இதனால் பெரும் நஷ்டத்தை இந்த நிறுவனங்கள் சந்திக்க ஆரம்பித்துள்ளன.
இந்த நஷ்டத்தை ஈடுகட்ட செலவுகளை குறைக்கும் வேலையில் இந்த ஐ.டி. நிறுவனங்கள் இறங்கியுள்ளன. வேலை நேரத்தை 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை குறைத்து மின்சாரத்தை சேமிக்கும் செயலில் பல நிறுவனங்கள் இறங்கியுள்ளன.
வெளிநாட்டு நிறுவனங்களிடம் பில் செய்ய முடியாத சப்போர்ட் ஸ்டாப் எனப்படும் எச்.ஆர், அக்கெளண்ட்ஸ் போன்ற பிரிவுகளுக்கு நிரந்தரமாக ஆள் சேர்ப்பதை தவிர்த்துவிட்டு காண்ட்ராக்ட் ஊழியர்களை நியமிக்க ஆரம்பித்துள்ளன பல நிறுவனங்கள். விப்ரோ, இன்போசிஸ், ஐபிஎம் போன்ற ெபரிய நிறுவனங்களே இந்த வேலையில் இறங்கிவிட்டன.
பல முக்கிய நிறுவனங்கள் வரும் மார்ச் வரை வேலைக்கு ஆள் சேர்ப்பதை ஒத்தி வைத்துவிட்டு இருக்கும் ஊழியர்களுக்கு அதிக வேலையை தர ஆரம்பித்துள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications