மலேசிய அரசுடன் பேசி வருகிறோம்-பிரணாப் முகர்ஜி
{image-Pranab Mukerjee250_30112007.jpg tamil.oneindia.com}டெல்லி: மலேசியாவில் தமிழர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து அந் நாட்டு அரசுடன் மத்திய அரசு பேசி வருவதாகவும், தமிழக முதல்வர் குறித்து அந் நாட்டு அமைச்சர் தவறாகப் பேசியகு குறித்தும் விளக்கம் கேட்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கருத்து வெளியிட்ட மலேசிய அமைச்சர் நசீர் அஸ்ரியின் பேச்சைக் கண்டித்து இன்று ராஜ்யசபாவில் திமுக உறுப்பினர் சண்முக சுந்தரம் பிரச்சனை கிளப்பினார்.
இந்திய பிரதமருக்கு கருணாநிதி கடிதம் எழுதியதை மலேசிய அமைச்சர் எப்படி கண்டிக்க முடியும் என சண்முக சுந்தரம் கேட்டார். இதே கருத்தை பல கட்சிகளின் உறுப்பினர்களும் தெரிவித்தனர்.
காங்கிரஸ் உறுப்பினர்களான ஞானதேசிகன், மங்னிலால் மண்டல், பாஜக உறுப்பினர் அலுவாலியா ஆகியோர் மலேசிய அமைச்சரைக் கண்டித்துப் பேசியதோடு, மலேசிய தூதரை மத்திய அரசு அழைத்து தனது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் பச்செளரி, மலேசிய அமைச்சரின் கண்டிக்கத்தக்க பேச்சு குறித்து மலேசிய அரசிடம் நிச்சயமாக பேசப்படும் என்றார்.
இதைத் தொடர்ந்து அறிக்கை வாசித்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி,
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் நலனைக் காப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. மலேசியாவுடன் நமக்கு நல்ல உறவு உள்ளது. இந்த விவகாரத்தில் மலேசிய அரசை மத்திய அரசு தொடர்பு கொண்டு பேசி வருகிறது.
நமது மரியாதைக்குரிய தலைவரான தமிழக முதல்வர் கருணாநிதி குறித்து அந் நாட்டு அமைச்சர் பேசியது குறித்தும் மலேசிய அரசுடன் நான் பேசுவேன். நான் மலேசிய நிர்வாகத்துடன் தொடர்பில் உள்ளேன். இந்த பிரச்சனைகள் குறித்து விவாதிப்பேன்.
மலேசியாவில் இந்திய வம்சாவளியினர் பெரும் எண்ணிக்கையில் வசிக்கின்றனர். பிரிட்டிஷாரால் மலேசியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட இந்தியர்களின் வம்சாவளியினர் தாங்கள் அங்கு இரண்டாதர குடிமக்களாக நடத்தப்படுவதை கண்டித்து பிரிட்டனுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
அந்த வழக்கில் தங்களுக்கு பிரிட்டிஷ் அரசியின் ஆதரவு கோரி பிரிட்டிஷ் தூதரகத்தில் மனு கொடுக்கத்தான் பேரணி நடத்தியுள்ளனர் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications