மாணவர்களைத் தூண்டியதாக கருணாநிதியை குறை சொல்லவில்லை: ராமதாஸ்
சென்னை: மருத்துவக் கல்லூரி மாணவர்களை முதல்வர் கருணாநிதி தூண்டி விடுவதாக நான் ஒருபோதும் சொல்லவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கட்டாய மருத்துவ சேவை கூடாது என்று கோரி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டம் தேவையற்றது, இது சிலரின் தூண்டுதலால் நடைபெறுகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்குப் பதில் அளித்து அறிக்கை விட்ட சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், ராமதாஸின் புகார்களை மறுத்திருந்தார். திமுகவோ அல்லது முதல்வர் கருணாநிதியோ போராட்டத்தைத் தூண்டி விடவில்லை என்று அவர் கூறியிருந்தார்.
இதற்கு நேற்று ராமதாஸ் விளக்கம் அளித்து அறிக்கை விட்டுள்ளார். அதில், முதல்வர் கருணாநிதி, மாணவர்களைத் தூண்டி விடுவதாக நான் ஒருபோதும் குற்றம் சாட்டவில்லை. என் மீது அமைச்சர் பன்னீர் செல்வம் அவதூறான புகார்களைக் கூறுகிறார். எனது கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்வதை விட்டு விட்டு இப்படி புகார் சொல்கிறார்.
நான் கேட்டது, சட்டக் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியபோதெல்லாம் அரசாங்கம், அந்தக் கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளது, விடுதிகளைக் கூட மூடியுள்ளனர். ஆனால் இப்போது மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் போது மட்டும் அவற்றை மூட உத்தரவிடாதது ஏன். இதுதான் நான் கேட்ட கேள்வி. அரசின் இந்தப் போக்கு எனக்கு வியப்பளிக்கிறது.
பிற கல்லூரி மாணவர்களின் போராட்டங்களின்போது அடுத்த நாளே கல்லூரிகளையும், விடுதிகளையும் மூடச் சொன்ன தமிழக அரசு, கடந்த 3ம் தேதி முதல் காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளை மட்டும் மூட உத்தரவிடாதது ஏன்.
கடந்த மூன்று மாதங்களாக மாணவர்கள் போராட்டப் பாதையில் சென்று கொண்டுள்ளனர். ஆனால் தமிழக அரசு இதுகுறித்து எந்தத் தீர்வையும் காண முயற்சிக்காமல் மெளனம் சாதித்து வருகிறது.
இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர அரசு மருத்துவக் கல்லூரிகளின் டீன்கள், சுகாதாரத் துறை செயலாளர், சுகாதார அமைச்சர் ஆகியோர் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை விளக்க முடியுமா.
இவையெல்லாம்தான் எனது கேள்விகள். ஆனால் இவற்றுக்கெல்லாம் அமைச்சர் பன்னீர் செல்வம் பதிலளிக்கவில்லை. மாறாக, முதல்வரைக் காப்பாற்றும் நோக்கில் என் மீது அவதூறாகப் பழி சுமத்தியுள்ளார் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications