வழக்கறிஞர்கள் ஸ்டிரைக்-நீதிமன்ற பணிகள் பாதிப்பு
சென்னை: உத்தரப்பிரதேசத்தில் நீதிமன்றங்களில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதை கண்டித்து இன்று தமிழகத்தில் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 23ம் தேதி பைசாபாத், லக்னெள மற்றும் வாரணாசியில் குண்டுவெடிப்புகள் நடந்தது. இதில் பைசாபாத், லக்னெள ஆகிய இடங்களில் நீதிமன்ற வளாகங்களுக்குள் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதில் 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
நீதிமன்றங்களில் நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்புகளைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பணிக்கு வந்திருந்தனர். ஆனால் வழக்கறிஞர்கள் எவரும் பணிக்கு வராததால் அவர்கள் அனைவரும் திரும்பிச் சென்றனர். இதே நிலைதான் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் நீடித்தது.
இதனால் சென்னை உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள் அனைத்திலும் வழக்கறிஞர்கள் வராததால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.
மதுரையில்...
மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர்கள் எவரும் வராததால் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை. இதேபோல் மாவட்ட நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் பணிக்கு வராததால் இதே நிலை தான் நீடித்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications